Monday, April 15, 2013

ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா?


ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற பலர் சரியான உண்மையைத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன. எனவே ஆல்கஹால் அருந்துபவர்கள், அதைக் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலில் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது, பீர், வோட்கா மற்றும் ஒயின் தான். இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/health/how-to/2013/how-drinking-alcohol-can-be-healthy-002904.html